வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (12:44 IST)

வன்மத்தை கொட்டிய எதிர்தரப்பு..? – ஓபிஎஸ் வாகனம் பஞ்சர்!

அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையிலிருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில் அவரின் வாகனத்தை எதிர்தரப்பினர் பஞ்சர் ஆக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை குறித்த மோதல் நிலவி வரும் நிலையில், கடும் பரபரப்புகளுக்கு இடையே இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தவிர வேறு 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.

தொடர்ந்து கூச்சல், குழப்பங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்றைய பொதுக்குழு கூட்டம் முடிவடைவதாக சபாநாயகர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.மேலும் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி காலை 9 மணி அளவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர் கூச்சல் குழப்பம் காரணமாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையிலிருந்து எழுந்து சென்றனர். அப்போது எடப்பாடியார் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சட்டத்திற்கு புறம்பான வகையில் பொதுக்குழுவை எடப்பாடியாட் அணி நடத்துவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளியேறிய ஓபிஎஸ் அவரது பிரச்சார வாகனத்தில் ஏற சென்றபோது அதன் டயர்கள் பஞ்சர் செய்யப்பட்டிருந்தன. எதிர்தரப்பினர்தான் இதை செய்ததாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு மேலும் பரபரப்பு நிலவி வருகிறது.