வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஏப்ரல் 2023 (21:07 IST)

எடப்பாடி பழனிசாமியை வரலாறு மன்னிக்காது: திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ் ஆவேச பேச்சு

திருச்சியில் இன்று நடைபெற்ற அதிமுக ஓபிஎஸ் அணியின் மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமியை வரலாறு மன்னிக்காது என ஓபிஎஸ் ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
 
சசிகலா தான் என்னை மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆக்கினார் என்றும் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது அதிமுகவாக இருக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் பேசினார் 
 
அதிமுக வங்கி கணக்கில் உள்ள நிதியை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்றும் அதிமுக கட்சி நிதியை பயன்படுத்துவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதவியை தந்தவர் சசிகலா என்றும் எடப்பாடி பழனிச்சாமியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva