செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (12:39 IST)

10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பா? ஓபிஎஸ் கோரிக்கை!

மழை காரணமாக பொதுத் தேர்வுகள் மே மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் 
 
லமமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டும் பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்களை நடத்தி முடிக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் கூறியிருப்பது மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார் 
 
அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவ மாணவியர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மன அழுத்தத்தை அதிகரிக்க வழி வைக்குமே தவிர மாணவ மாணவியர் மன நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது என்றும் பாடத்திட்டங்களை குறைத்து பொதுத்தேர்வுகளை மே மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இது இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் பொது தேர்வுக்கு மாணவர்கள் தயார் நிலையில் இல்லாத சூழ்நிலையில் முழு படத்தையும் முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய ஓபிஎஸ் அவர்கள் பொதுத் தேர்வு குறித்த தெளிவான முடிவு என்னும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இல்லை என்றும் கூறியுள்ளார்