வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:23 IST)

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வருமான வரம்பு உயர்வு! – தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி உதவித்தொகைக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமவரம்பை உயர்த்தி நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகைக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த பிரிவுகளில் வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ.2 லட்சமாக இருந்த நிலையில் தற்போது ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.