தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவுக்கு இரட்டை இலையை கொடுக்காதீங்க! தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்!
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
- எந்த சதி நடந்தாலும் 2026-ல் திமுக ஆட்சி நிச்சயம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
- திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கொடிய சான்று கோவை வன்கொடுமை சம்பவம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
- பீகார்ல பேசுனதை தைரியம் இருந்தா தமிழ்நாட்டுல பேசுங்க பாப்போம்! - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் சவால்!
ஓபிஎஸ் கூடாரம் காலி.. இருந்த ஒரே ஒரு பிரமுகரும் திமுகவில் இணைந்தார்..!
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளரும், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன், இன்று காலை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவர் தன்னை இணைத்துக்கொண்டார். தி.மு.க.வில் இணைந்ததை தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்குத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், "தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலினை ஏற்று தி.மு.க.வில் இணைந்தேன். அ.தி.மு.க. பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக செயல்படுகிறது," என்று விமர்சித்தார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் விலகியதால், ஓ.பி.எஸ். கூடாரம் காலியாகிவிட்டதாக விமர்சனம் செய்யப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
