அதிமுக கொடியை பயன்படுத்த நீதிமன்றம் தடை.. சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் மேல்முறையீடு..!
அதிமுக பெயர் கோடி மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் இந்த தடையை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என அதிமுக இரண்டு பிரிவுகளாக உடைந்த நிலையில் இபிஎஸ் பக்கமே அனைத்தும் கைக்கு வந்தது. பொதுச்செயலாளர் பதவி, அதிமுக கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவை அனைத்தும் இபிஎஸ் தரப்புக்கு சொந்தம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து ஓபிஎஸ் அதனை பயன்படுத்தி வந்தார்.
இதனை அடுத்து அதிமுக பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதிமுக பெயர் கட்சியின் கொடி லெட்டர் பேடு ஆகியவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
Edited by Mahendran