கேரளா டீ குடிக்க விருப்பம்: எளிமையாய் வந்திறங்கிய ஓபிஎஸ்!

ops
Prasanth Karthick| Last Updated: திங்கள், 20 ஜனவரி 2020 (15:41 IST)
சபரிமலை சென்ற துணை முதல்வர் ஓபிஎஸ் டீ குடிக்க இறங்கியபோது மக்கள் கூட்டம் அவரை சுற்றி வளைத்தது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஐயப்ப தரிசனத்திற்காக சபரிமலைக்கு சென்றிருந்தார். தரிசனம் முடித்துவிட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தவர் தேக்கடி அருகே வரும்போது கேரள டீ குடிக்க விரும்பியுள்ளார். இதற்காக காரை விட்டு இறங்கி அருகில் இருந்த தேநீர் கடைக்கு சென்றுள்ளார்.

துணை முதலமைச்சர் வந்திருக்கும் செய்தி அப்பகுதியில் வேகமாக பரவவே மக்கள் கூட்டம் அவரை காண குவிந்துள்ளது. டீ தயாராகாத நிலையில் மக்கள் கூட்டம் கூடிவிட்ட நிலையில் சிறிது நேரம் மக்களோடு பேசிக் கொண்டிருந்த ஓபிஎஸ் கூட்டம் அதிகமானதால் காரில் சென்று ஏறியுள்ளார். ஒருவழியாக தேநீர் தயாரிக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டது. காருக்குள் அமர்ந்தபடியே தேநீரை பருகிய ஓபிஎஸ் மக்களிடம் விடைப்பெற்று புறப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :