வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 30 ஜூலை 2020 (13:24 IST)

விஷமிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை: அண்ணாசிலை காவிக்கொடி குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை என்ற பகுதியில் முன்னாள் முதல்வரும் பேரறிஞருமான் அண்ணா அண்ணா சிலை மீது மர்ம நபர்கள் காவி கொடி கட்டிய சமபவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் அண்ணா சிலை அருகே உள்ள பகுதிகளில் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றும் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் அந்த பகுதியில் நிலைமையை சரி செய்ய முயற்சித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் இதுகுறித்து தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும்.