செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (10:00 IST)

அண்ணாவுக்கும் காவிக்கொடி அவமரியாதை! – கன்னியாக்குமரியில் பதற்றம்!

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமரியாதை செய்யப்பட்டதை தொடர்ந்து கன்னியாக்குமரியில் அண்ணா சிலைக்கு காவிக்கொடி மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்து அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கன்னியாக்குமரியில் அண்ணா சிலைக்கு காவிக்கொடி மாட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள அண்ணா சிலை மீது மர்ம கும்பல் பழைய சீரியல் பல்புகள், சிவப்பு பூக்களை கொண்ட ஆரம் ஆகியவற்றை அணிவித்து சிலையின் முன்பாக காவிக்கொடியை பறக்கவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து அரசியல் தலைவர்கள் சிலைகல் இவ்வாறாக அவமானப்படுத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.