1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (07:49 IST)

ஓபிஎஸ் சகோதரர் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

ஓபிஎஸ் சகோதரர் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!
முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் அவர்களின் சகோதரர் காலமானதை அடுத்து அரசியல் கட்சியின் பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் பாலமுருகன் அவர்கள் இன்று பெரியகுளத்தில் காலமானார். ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் சிகிச்சை முடிவடைந்து நேற்று இரவு அவர் பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு திரும்பியதாக தெரிகிறது, இந்த நிலையில் வீடு திரும்பிய ஒரே நாளில் அவர் காலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது சகோதரர் பாலமுருகன் குடும்பத்தினருக்கு அதிமுகவினர் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது