1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2024 (12:44 IST)

ஓ.பன்னீர்செல்வம் எங்கள் கட்சிக்காரர்: அண்ணா நினைவிடத்தில் நடந்த சந்திப்பு குறித்து சசிகலா

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த வந்த சசிகலா தற்செயலாக அங்கு மரியாதை செலுத்து வந்த ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் பேட்டி அளித்த போது ஓ பன்னீர்செல்வம் எங்கள் கட்சிக்காரர் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்ட காட்சியையும் அங்கு பத்திரிகையாளர்களால் பார்க்க முடிந்தது.

பிரிந்து கிடக்கும் அதிமுக ஒரே அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் கூறிவரும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர்களுடன் ஓ பன்னீர் செல்வம் இணைந்து செயல்படுவார் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பை அவரது ஆதரவாளர்கள் பாசிட்டிவாக பார்த்து வருகின்றனர். இந்த சந்திப்புக்கு பின் அதிமுக ஒன்றிணையுமா? சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மூவரும் இணைந்து ஒரு அணியை உருவாக்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran