புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (20:20 IST)

விஜய் தொடங்கிய புதிய அரசியல் கட்சிக்கு டிடிவி. தினகரன் வாழ்த்து!

நடிகர் விஜய் இன்று தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சி தொடங்கி தன் ரசிகர்களுக்கும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு இன்ப அதிர்ச்சியளித்த நிலையில், விஜய் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு டிடிவி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  தனது  மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு உதவிகள் செய்து வந்ததார்.

சமீபத்தில், விஜய் பயிலகம், விஜய் நூலகம், விஜய் இலவச மருத்துவ மையம், விஜய் இலவச சட்ட ஆலோசனை மையம் என்று அவர் செய்யும் செயல்கள் தன் ரசிகர்கள் மற்றும் இயக்க நிர்வாகிகளை தயார் படுத்தும் நிகழ்வாகவும், அரசியலை மையப்படுத்தியதாகவும் இருந்தது.

எனவே  அவர் விரைவில் கட்சி தொடங்கப் போகிறார் என பல்வேறு தகவல் வெளியான நிலையில், இன்று விஜய் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை அறிவித்து, அக்கட்சியின் தலைவராக தனது முதல் அறிக்கையும் வெளியிட்டார்.

விஜய்யின் அரசியல் வருகை பற்றி, அமைச்சர் உதயநிதி , சீமான், ஜெயக்குமார், அண்ணாமலை, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த  நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 
dinakaran

அதில், ‘'தமிழக வெற்றி கழகம் எனும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.