திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (17:26 IST)

வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது திமுக ஆட்சி: ஒபிஎஸ் - ஈபிஎஸ் அதிரடி!

வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் திமுக ஆட்சி முதலிடம் என ஒபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 
திமுக ஆட்சியில் மின்வெட்டு தலைவிரித்தாடுகிறது என அதற்கு கண்டனம் தெரிவித்து ஒபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கடந்த பத்தாண்டு காலம் தலைகாட்டாத மின்வெட்டு இப்போது மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. 
 
ஆட்சிக்குவந்து ஒருமாதமே முடிந்தநிலையில் வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் திமுக ஆட்சி முதலிடம் என குற்றம் சாட்டியுள்ள ஒபிஎஸ்-ஈபிஎஸ்,  ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து திமுகவின் இயற்கை குணாதிசயங்கள் மக்களை வாட்டி வதைக்கிறது என கூறியுள்ளனர். மேலும், எந்த அச்சறுத்தலும் அதிமுகவை நெருங்க முடியாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இந்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.