புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 மே 2019 (10:10 IST)

மாண்புமிகு மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் குமார்: இது எப்போ?

அழைப்பிதழ் ஒன்றில், ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். தேனி தொகுதியில் வெற்றி பெற்ற இவருக்கு அமைச்சர் பதவி வாங்க ஓபிஎஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. 
 
இந்நிலையில், அழைப்பிதழ் ஒன்றில், மாண்புமிகு. ஓ.ப.ரவீந்திரநாத் குமார், எம்.பி, மத்திய அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 
இதற்கு முன்னர் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே தேனி தொகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியின் எம்பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது பூதாகரமாக வெடித்தது. 
 
பின்னர் அந்த கல்வெட்டில் இருந்து ரவீந்திரநாத் பெயர் மறைக்கப்பட்டு, இவ்வாறு செய்ததற்காக ஒருவர் கைதும் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.