திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (11:16 IST)

ஆஸ்கர் விருது பெறும் நடிகருக்கும் மேலாக நடிக்கிறார் ஓபிஎஸ்: ஜெயகுமார் கிண்டல்!

jayakumar
பதவிக்காக ஆஸ்கார் விருது பெறும் நடிகருக்கு மேலாக நடிக்கிறார் ஓபிஎஸ் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக தற்போது ஓபிஎஸ் பிரிவு மற்றும் ஈபிஎஸ் பிரிவு என இரு பிரிவுகளாக பிரிந்து உள்ளன என்பதும் இரு பிரிவுகளிலும் உள்ள தலைவர்கள் அணி மாறி அவ்வப்போது சென்று வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவ்வப்போது ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் குறித்து கடும் விமர்சனம் செய்து வருகிறார் 
 
அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், ‘ஆஸ்கார் விருது பெறும் நடிகருக்கு மேலாக ஓபிஎஸ் நடிக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்