புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 22 மே 2019 (18:26 IST)

வாக்குப்பதிவு எந்திரங்களை அச்சத்துடன் கண்காணிக்கும் எதிர்க்கட்சிகள்!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில்  வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடப்பதை தடுப்பதற்காக எதிர்க்கட்சியினர் இரவு பகல் பாராமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

 
சமீப நாட்களாக வாக்குபதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்எதிர்க்கட்சி வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் என பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறெல்லாம் மோசடி நடப்பதற்கு வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் கூறியும், எதிர்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்குப் பதிவு எந்திரங்கள் மாற்றப்படலாம் என்ற அச்சத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள  கட்டிடங்களில் முகாமிட்டு இரவு பகல் பாராமல்  24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். 
 
அந்தவகையில் தற்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையை சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிப்பு பகுதியில் இருந்து பாதுகாப்புப் படையினருடன் அமர்ந்து கட்சிப் பிரதிநிதிகள் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவது குறித்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மோசடி நடப்பதற்கு வாய்ப்புகளே இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.