திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 16 ஜூலை 2020 (16:21 IST)

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் சினிமா தியேட்டர்களைத் திறக்க வாய்ப்பு?

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் தாக்கல் இந்தியாவிலும் அதிகரித்துள்ளதால் வரும் ஜூலை மாதம் 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஜுன் மாதம் 19 ஆம் தேதி சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
 
இனிமேல் சினிமா பட ஷூட்டிங் எப்போது நடக்குமென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
திரையரங்குகளும் திறக்கப்படததால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. எனவே வெப்சீரிஸில் முன்னணி நடிக்க நடிகர்கள் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் சினிமா தியேட்டர்களைத் திறக்க வாய்ப்புள்ளதாக திரையரங்கு  உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள்  வெளியாகிறது.
 
அதேசமயம் அரசு விதித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையிலும் , தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க தாயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது