வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (12:20 IST)

2021 சட்டமன்றத்தில் பாஜக இடம்பெறும்! – பாஜக தலைவர் சூசகம்!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியில் பாஜக இடம்பெறும் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கடவுள் முருகனை யூட்யூப் சேனல் ஒன்று விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்த விவகாரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பாஜக தலைவர் எல்.முருகன் ”தமிழ் கடவுள் முருகனை அவதூறாக பேசியவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த யுட்யூப் சேனலை தடை செய்வதோடு அதன் பின்புலத்தில் யாரெல்லாம் இயங்குகிறார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும். அவர்கள் அனைவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து பேசியுள்ள அவர் “அடுத்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமைக்கும் கட்சி வெற்றிபெறும். சட்டசபையில் பாஜகவும் பங்கு வகிக்கும்” என்று கூறியுள்ளார். இதனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடவில்லை என தெரிந்துள்ளது. அதனால் அதிமுகவுடனான பாஜகவின் கூட்டணி அடுத்த சட்டசபை தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.