அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு - செப்.29க்குள் விண்ணப்பிக்கலாம்

jobs 230
Annakannan| Last Modified செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (18:43 IST)
அஞ்சல் துறையில் பல்வேறு பணி இடங்களுக்குத் தகுதி உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அஞ்சல் அலுவலகக் கோட்டங்கள், அஞ்சல் பிரிப்பகக் கோட்டங்கள் / யூனிட்டுகள் மற்றும் இதர அஞ்சல் அலுவலகங்களில் உள்ள அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பக உதவியாளர், தபால்காரர் மற்றும் பல்வினைப் பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
· அஞ்சலக உதவியாளர் / அஞ்சல் பிரிப்பக உதவியாளர்கள்: ரூபாய் 5,200 - 20,200 + கிரேடு பே 2,400 + அனுமதிக்கப்பட்ட படிகள்.

· தபால்காரர்: ரூ. 5,200 - 20,200 + கிரேடு பே 2,000 அனுமதிக்கப்பட்ட படிகள்.

· பல்வினைப் பணியாளர் (விஜிஷி) ரூ.5,200 - 20,200 + கிரேடு பே 1,800 + அனுமதிக்கப்பட்ட படிகள்.

அஞ்சல் அலுவலகக் கோட்டங்கள், அஞ்சல் பிரிப்பகக் கோட்டங்கள் / யூனிட்டுகள் மற்றும் இதர அஞ்சல் அலுவலகங்களின் முழு விவரம், காலி இடங்கள், கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பப் படிவங்கள் ஆகியவற்றை www.tamilnadupost.nic.in என்ற முகவரியுள்ள தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி நாள்: 22.09.2014

விண்ணப்பிக்க விரும்பும் நபர் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களைப் பணியிடங்கள் காலியாக உள்ள சம்பந்தப்பட்ட அஞ்சல் கோட்ட அலுவகத்திற்கோ, பிற அஞ்சல்-சார் அலுவலகத்திற்கோ மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அஞ்சல் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :