1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2023 (10:55 IST)

ஊட்டி போறீங்களா? கண்டிப்பா பாக்க வேண்டிய இடங்கள் எது?

Ooty
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சில சுற்றுலா தளங்கள் குறித்து காண்போம்.

கோடை விடுமுறை தொடங்கி விட்டாலே சுற்றுலா செல்வது மக்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது விடுமுறை காரணமாக குளிர்வாச ஸ்தலமான ஊட்டிக்கு ஏராளமான மக்கள் குடும்பத்துடன் சென்றுக் கொண்டுள்ளனர். ஊட்டிக்கு சென்றால் பார்க்க அழகான ரம்மியமான சில இடங்கள் குறித்து பார்க்கலாம்

தொட்டபெட்டா சிகரம்
Thottapetta

ஊட்டி நகரத்திலிருந்து மிக அருகில் அமைந்துள்ள ரம்மியமான பகுதி தொட்டபெட்டா சிகரம். சுமார் 2,623 அடி உயரமுள்ள இந்த சிகரம் தென்னிந்தியாவின் மிக உயரமான மலை சிகரம் ஆகும். ஊட்டியிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள தொட்டபெட்டாவிற்கு பேருந்து வசதியும் உள்ளது. விடியற்காலையிலேயே சூரிய உதயத்தில் சென்றால் ரம்மியமான காட்சிகளை பார்க்கலாம்.

தாவரவியல் பூங்கா
Botanical Garden

ரொம்ப அலையாமல் சுற்றி பார்க்கவும், ரிலாக்ஸ் செய்யவும் பொட்டானிக்கல் கார்டன் அருமையான இடம். ஊட்டிக்கு உள்ளேயே இருப்பதால் ரொம்ப பயணிக்க அவசியமில்லை. கோடை பருவத்தில் அரசால் அங்கு நடத்தப்படும் மலர்கள் கண்காட்சி மிகவும் பிரபலமானது. ஏராளமான விதவிதமான பூக்களைக்கொண்டு பல்வேறு உருவங்களில் உருவாக்கப்படும் பூ வேலைப்பாடுகள் கண்களுக்கு விருந்தாகும்.

ஊட்டி ஏரி
ooty lake

ஊட்டியில் அமைந்துள்ள 65 ஏக்கர் பரப்பளவிலான அழகிய ஏரி சுற்றுலா செல்பவர்களுக்கு சிறந்த ரிலாக்ஸ் இடம். இந்த ஏரிகளில் படகு சவாரி வசதியும் உள்ளது. துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து ஏரியில் இனிமையான படகு சவாரி செல்லலாம்.

எமரால்டு ஏரி
Emerald Lake

ஊட்டியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எமரால்ட் ஏ வீ இயற்கை சூழ்ந்த அழகிய பகுதியாகும். சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்த ஏரிப்பகுதியில் வாழ்த்துக்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. இங்கிருந்து சூரிய உதயம், சூர்யா அஸ்தமனம் பார்ப்பது அழகாக இருக்கும்.

முதுமலை தேசிய பூங்கா
Mudhumalai

ஊட்டி அருகே உள்ள முதுமலை தேசிய பூங்கா வனவிலங்குகளை காண அற்புதமான இடமாகும். இந்த பகுதியில் யானைகள், சிறுத்தைகள், புலிகள், மான்கள் என பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. பார்க் வேன் சவாரி மூலம் காட்டுப்பகுதிக்குள் சென்று வன விலங்குகளை பார்ப்பது த்ரில்லிங்கான அனுபவமாக இருக்கும்.

பைக்காரா நீர்வீழ்ச்சி
Pykara Lake

ஊட்டி – கூடலூர் சாலையில் அமைந்துள்ள பைக்கார நீர்வீழ்ச்சி மற்றும் ஏரி நேரம் செலவிட அற்புதமான பகுதி. பைக்கார ஏரியில் படகு சவாரி செய்து விட்டு, அருகே உள்ள பைக்கார நீர்வீழ்ச்சி சென்று கிடை மட்டமான அருவியில் ஆர்ப்பரித்து ஓடும் நீரை மிக அருகில் கண்டு ரசிக்கலாம். மலைகளுக்கு நடுவே அருவிக்கு அருகே அமர்ந்து அருவியை ரசிப்பது ரம்மியமாக இருக்கும்.

டால்பின் நோஸ்
Dolphin nose

குன்னூருக்கு அருகே உள்ள டால்பின் நோஸ் அருமையான சுற்றுலா தளமாகும். டால்பின் மூக்கு போன்ற வளைவில் நின்று சுற்றிலும் உள்ள பிரம்மாண்டமான மலைத் தொடர்களையும் அதில் ஆர்பரித்து கொட்டும் அருவிகளையும் ஜாலியாக ரசிக்கலாம்.
இவை தவிர தேயிலை தோட்டம், மலை ரயில் என ஏராளமான சுற்றுலா பகுதிகள் ஊட்டியில் உள்ளன. அவற்றையெல்லாம் முழுவதும் சுற்றி பார்க்க ஒரு வார காலமாவது தேவைப்படும்.

Edit by Prasanth.K