ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து: அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும், பலர் இந்த ரயிலில் பயணம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊட்டி மலை ரயில் பாதையில் பெய்த கனமழை காரணமாக நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஊட்டி மலை ரயில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
.