1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ooty mountain train again in transport

மீண்டும் தொடங்கிய ஊட்டி மலை ரயில் சேவை! – பயணிகள் மகிழ்ச்சி!

Tamilnadu
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் முக்கியமான சுற்றுலாவாக ஊட்டி மலை ரயில் பயணம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலசரிவால் ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் பாதை சேதமடைந்ததால் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

இரண்டு மாதங்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மலை பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் மலை ரயிலில் பயணிகள் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
பெங்களூருவில் லேசான நிலநடுக்கம்!