செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (09:40 IST)

மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் ஐடி ரெய்டு! – சென்னையில் பரபரப்பு!

செல்போன் நிறுவன சோதனை தொடர்பாக மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ கெட்டி இண்டவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சீனாவின் ஜியோமி நிறுவனத்தின் தமிழக ஆலைகளை நிர்வகிக்கிறது. சேவியர் பிரிட்டோ சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஜியோமி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய சேவியர் பிரிட்டோவின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.