புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 பிப்ரவரி 2019 (13:46 IST)

ஓரே மேடையில் மு.க. ஸ்டாலின், கமல்...சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்...

கமல்ஹாசன் கட்சி தொடங்கும் முன்பு வரை திராவிட ஆதரவாளராகவே தன்னை அடையாளப்படுத்தி வந்தார். அவர்  முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது தனி மரியாதையும் வைத்திருந்தார். ஸ்டாலினும் கமலும் அப்போதெல்லாம் நெருங்கிப் பழகி வந்தனர்.ஆனால் கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஆரம்பித்த பின்னர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கடும் விமர்சனங்களை அடுக்கினர்.
இந்நிலையில் ரஜினி மகள் சௌந்தர்யா - விசாசன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் திருமண விழாவில் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து  நீண்ட நேரம் உரையாடினர்.
 
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவரும் திமுக  கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,மதிமுக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்க்கவும் காங்கிரஸ் விரும்புவதாக பேச்சு எழுந்தது. இதற்கான முயற்சியில்  தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்அழகிரி ஈடுபட்டுள்ளார்.
 
ஆனால் திமுகவின் கட்சி நாளேடான முரசொலியில் பூம்பூம் மாடு என்ன செய்துவிடும் என்ற தலைப்பில் கமலை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற ரஜினியில் மகள் திருமணத்தில் கமல் மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரும் விமர்சனங்களைக் கடந்து பரஸ்பர நட்பு பாராட்டுவது போல் அருகருகே அமர்ந்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.