வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (17:35 IST)

சூதாட்ட மசோதாவை ஆளுனர் திருப்பி அனுப்ப இதுதான் காரணம்: அண்ணாமலை

annamalai
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அந்த மசோதா திருப்பி அனுப்பியதற்கான காரணம் இதுதான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
கடந்த  அக்டோபர் மாதம் தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வந்த கவர்னர் நேற்று இந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். 
 
இது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவர் திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தவறான சட்டம் முன்வடிவில் ஆளுநர் கையில் கையெழுத்து போட்டால் அதனை நீதிமன்றம் நிராகரித்து விடும் என்றும் அதனால் தான் ஆளுனர் மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆளுநர் இருப்பதாக கூறுவது தவறானது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran