வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 9 மார்ச் 2023 (14:25 IST)

என் மனைவி ஜெயலலிதாவை விட 1000 மடங்கு பவர்ஃபுல்: அண்ணாமலை

என்னுடைய தாயார் ஜெயலலிதாவிட 100 மடங்கு பவர்ஃபுல் என்றும் என்னுடைய மனைவி ஜெயலலிதாவிட ஆயிரம் மடங்கு பவர்ஃபுல் என்றும் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். 
 
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உடன் என்னை ஒப்பிடவில்லை என்றும் ஜெயலலிதா ஒரு தனித்தன்மை உள்ள தலைவர் என்றும் அவர் தவறான முடிவு எடுத்தால் கூட அந்த முடிவிலிருந்து பின் வாங்க மாட்டார் என்றும் ஏனெனில் அவர் தலைவர் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்
 
அதே போல் தான் நானும் ஒரு முடிவை எடுத்தால் பின்வாங்க மாட்டேன் என்றும் அதற்காக நான் ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை என்றும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்தன்மையான தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை சொல்வதற்காக ஜெயலலிதாவை கூறினேன் என்றும் அவர் தெரிவித்தார். 
 
என்னை பொருத்தவரை ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் ஒரு தலைவி தான் என்றும் என் தாயார் ஜெயலலிதாவைவிட 100 மடங்கு பவர்ஃபுல் என்றும் என் மனைவி ஜெயலலிதாவைவிட ஆயிரம் மடங்கு பவர்ஃபுல் என்றும் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva