1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Opposition Slams Government Over LPG Shortage and 25-Day Booking Rule Amid War

பிரதமர் இஸ்ரேல் சென்றிருந்தும், ட்ரம்ப் ஈரானை பற்றி எச்சரித்திருந்தும் இந்தியா ஏன் சுதாரிக்கவில்லை: எரிவாயு பற்றாக்குறை குறித்து சிவசேனா எம்பி

எரிவாயு தட்டுப்பாடு
மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு, தற்போது அரசியல் மோதலாக வெடித்துள்ளது. 
 
பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள உணவகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது கடும் தாக்குதலை தொடுத்துள்ளன.
 
மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் தவறான திட்டமிடலே இந்த நெருக்கடிக்கு காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். சிலிண்டர் முன்பதிவு செய்ய 25 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற புதிய விதியையும், விலை உயர்வையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. 
 
போதிய இருப்பு இருப்பதாக அரசு கூறுவது பொதுமக்களை திசைதிருப்பும் செயல் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார். 
சிவ சேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, "அமைதி காலத்தில் அனைத்தும் தயார் என்று கூறும் அரசு, போர் என்று வரும்போது கைவிடுகிறது" என்று சாடியுள்ளார். பிரதமர் இஸ்ரேல் சென்றிருந்தும், ட்ரம்ப் ஈரானை பற்றி எச்சரித்திருந்தும் இந்தியா ஏன் இந்த நெருக்கடிக்குத் தயாராக இல்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஏழை விவசாயி வீட்டு திருமணத்தில் திடீரென கலந்து கொண்ட ராகுல் காந்தி.. பரபரப்பான சிறு கிராமம்..!