வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (16:10 IST)

ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம்.. மொத்தம் 6 பேர் போட்டி..!

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கனவே அவரைத் தவிர மேலும் நான்கு ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிடும் நிலையில் தற்போது கடைசி நேரத்தில் இன்னொரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அமைப்பாக செயல்பட்டு வரும் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரது பெயரில் உள்ள மேலும் 4 பேர் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்ததால் வாக்காளர்கள் குழப்பம் அடைவார்கள் என்று கூறப்பட்டது.
 
ஒரே தொகுதியில் ஒரே பெயரில் ஐந்து பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டால் சின்னத்தை வைத்து மட்டுமே அடையாளம் காண முடியும் என்ற நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எந்த அளவு அதை சமாளிப்பார் என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் முடிவடையும் சில நிமிடங்களுக்கு முன் இன்னொரு ஓ பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மொத்தம் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்  உள்பட ஆறு பேர் ஒரே பெயரில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva