ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி அனுப்பியவர் கைது!

oline
ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி அனுப்பியவர் கைது!
siva| Last Updated: ஞாயிறு, 4 ஜூலை 2021 (18:18 IST)
ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆன்லைன் வகுப்பில் மாணவி பெயரில் இணைந்து ஆபாச செய்தியை மர்ம நபர் ஒருவர் அனுப்பியுள்ளார். ஆபாச செய்தி மற்றும் படங்களை அனுப்பியவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த மோகன் குமார் என்பது சைபர் க்ரைம் போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்

ஆன்லைன் வகுப்புக்கான குரூப்பில் இணைந்து மாணவிகள் செல்போன்களுக்கு அவர் ஆபாச படம் அனுப்பியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மாணவிகளின் ஆன்லைன் குரூப்பில் அவர் எப்படி இணைந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றனஇதில் மேலும் படிக்கவும் :