வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (15:35 IST)

சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது வகுப்பறை கட்டிய அரசு பள்ளி ஆசிரியர்!

சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது வகுப்பறை கட்டிய அரசு பள்ளி ஆசிரியர்!
சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது வகுப்பறை ஒன்றைக் கட்டி அதன் மூலம் ஆன்லைன் வகுப்பு எடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் வகுப்புகள் தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரு சில கிராமப்பகுதிகளில் இன்டர்நெட் சிக்னல் கிடைக்கவில்லை என்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்னல் கிடைப்பதற்காக மாணவர்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று ஆன்லைன் வகுப்புகளை செல்போன் மூலம் படித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் குடகு என்ற மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இண்டர்நெட் சிக்னல் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அருகில் இருந்த மாமரத்தின் மீது சிறிய வகுப்பறை ஒன்றை கட்டி அதில் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார். இந்த ஆரம்ப பள்ளி ஆசிரியருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது