1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 10 பிப்ரவரி 2022 (08:45 IST)

நீட்டை அண்ணாமலை ஆதரித்ததால் குண்டு வீசினேன்: கைதானவர் வாக்குமூலம்!

நீட்டை ஆதரித்து அண்ணாமலை பேசியதால் தான் பாஜக அலுவலகத்தில் குண்டு வீசி நேரம் கைதானவர் வாக்குமூலம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் குண்டு வீசியதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் இதுகுறித்து சிசிடிவி உதவியுடன் விசாரணை செய்த போலீசார் நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து உள்ளனர்
 
ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது உள்ள நிலையில் தற்போது இவர் மீது பாஜக அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவரிடம் விசாரணை செய்தபோது நீட்டை அண்ணாமலை ஆதரித்து பேசியதை கண்டித்து பெட்ரோல் குண்டு பேசினேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.