கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரியை கண்ணியமின்றி பேசியதற்காக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் தாக்கல் செய்த மணு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கருணாஸின் மனு மீது நீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது கருணாஸ் ரசிகர்களை தாக்கியதாக அவர்...