ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (12:27 IST)

சென்னையில் வடகிழக்கு பருவமழை நிவாரணப்பணிகள்.. தன்னார்வலர்களுக்கு அழைப்பு..!

சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக, அதிக மழைக்காலத்தில் நடைபெறும் நிவாரணப்பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.
 
தன்னார்வலர்கள் சென்னை மாநகராட்சியின் https://gccservices.chennaicorporation.gov.in/volunteer என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் நிறுவனத்தின் சார்பிலோ அல்லது தனிநபராகவோ விண்ணப்பிக்கலாம். 
 
அவர்களின் துறையைப் பொறுத்து பணிகள் ஒதுக்கப்படும், மேலும் அவர்கள் வசிக்கும் மண்டலத்தைப் பொறுத்து மண்டல அலுவலர்கள் அல்லது மண்டல ஆணையர்களின் வழிகாட்டுதலின்படி அவர்கள் பணியாற்றுவார்கள் என மாநகராட்சி ஆணையர் குறிப்பிட்டுள்ளார்
 
அதீத மழைக்காலத்தில் மாநகராட்சி மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளில் மாநகராட்சி உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஏராளமான தன்னார்வலர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran