வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (11:11 IST)

பருவ மழையை எதிர்கொள்ள படகுகள் வாங்கிய சென்னை மாநகராட்சி: வாடகைக்கு எடுக்கவும் திட்டம்..!

 Boat
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 36 படகுகளை சென்னை மாநகராட்சி சொந்தமாக வாங்கியுள்ளதாகவும், மேலும் மீனவர்களிடமிருந்து படகுகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கவிருக்கின்ற நிலையில், வட மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த நிலையில், சமீபத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் பருவமழையை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 
 
பெரு வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டால் மக்களை மீட்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 சிறிய படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியிருக்கிறது. முதல் கட்டமாக, பெருங்குடி பகுதிக்கு இரண்டு படகுகளும் மாதவரம் பகுதிக்கு ஒரு படகும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்களிடமிருந்து படகுகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
மேலும், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran