புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஜனவரி 2022 (14:11 IST)

இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டது ஒமிக்ரான்: அதிர்ச்சி தகவல்!

இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது என கொரோனா பகுப்பாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மட்டுமின்றி ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்றும் பெருநகரங்களில் தொற்று பரவலின் முக்கிய காரணியாக இருக்கிறது என்றும் அவர் அமைப்பு தெரிவித்துள்ளது
 
மேலும் அறிகுறி இல்லாத போதிலும் ஐசியூவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது