வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஜனவரி 2022 (14:08 IST)

அரசியல் கட்சியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்!

அரசியல் கட்சியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்!
இந்தியாவின் மிக உயர்ந்த மனிதர் என்ற பெருமைக்குரியவர் தற்போது அரசியல் கட்சியில்  சேர்ந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் முதல் தேர்தல் நடைபெறுவதை அடுத்து புதியவர்கள் அரசியல் கட்சிகள் சேர்வதும் ஏற்கனவே அரசியல் கட்சியில் உள்ளவர்கள் கட்சி மாறுவது நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் இந்தியாவின் மிக உயரமான மனிதராக அறியப்படும் தர்மேந்திர பிரதாப் சிங் என்பவர் சமாஜ்வாதி ஜனதா கட்சியில்  சேர்ந்துள்ளார். இவரும் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
சமாஜ்வாடி ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் யாதவுடன் இந்தியாவின் மிக உயரமான மனிதரான தர்மேந்திர பிரதாப் சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.