வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (18:31 IST)

மாண்டஸ் புயலால் சேதமடைந்த ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை: அமைச்சர் ஆய்வு

omandhurar
மாண்டஸ் புயல் காரணமாக ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனை சேதமடைந்த நிலையில் அந்த சேதம் குறித்து அமைச்சர் வேலு பார்வையிட்டார்.
 
 நேற்று முன்தினம் கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நுழைவாயிலில் உள்ள ஒரு மரம் முறிந்து விழுந்தது 
 
இதனை அடுத்து பல்நோக்கு மருத்துவமனையில் ஆறாவது மாடியில் பொருத்தப்பட்டு இருந்த கண்ணாடி மேற்கூரையை உடைந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
 
இந்த நிலையில் அமைச்சர் வேலு அவர்கள் இந்த மருத்துவமனைக்கு சென்று சேத விவரங்களை பார்வையிட்டார். மேலும் உடனடியாக சேதமடைந்த பொருள்கள் சரி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்
 
இதேபோல் சென்னையில் உள்ள ஒருசில மருத்துவமனையில் அவர் சென்று  பார்வையிட்டு சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran