1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூர்: ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் விஷ்ணு துர்க்கைக்கு சிறப்பு அலங்காரம்....!

கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் உற்சவருக்கு விஷ்ணு துர்க்கை அலங்கார நிகழ்ச்சி – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு.
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் பண்டைய வரலாறு வாய்ந்த கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி நிகழ்ச்சியினை முன்னிட்டு, ஆலய வளாகத்தில், உற்சவர் மாரியம்மன், வஞ்சியம்மன், வலங்கியம்மன் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டதோடு, உற்சவர் மாரியம்மன் விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பலவித வண்ண மலர்களினாலும், பல்வேறு விஷேச தீபாரதனைகள் காட்டப்பட்டது. கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்தி ஆகிய ஆரத்திகளுடன், சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
 
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர்  சிறப்பாக செய்திருந்தனர்.