அரசியலை விட்டு விலகத்தயார்! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம்

m.r.vijaya bashkar
Last Modified வெள்ளி, 26 அக்டோபர் 2018 (08:31 IST)
இனிவரும் எந்த தேர்தலிலாவது செந்தில்பாலாஜி போட்டியிட்டு டெபாசிட் வாங்கிவிட்டால் தான் அரசியலில் இருந்து விலகத்தயார் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூட்டம் ஒன்றில் ஆவேசமாக பேசியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது, செந்தில் பாலாஜி சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அல்லது, பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கிவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகி விட தயார் என சவால்
விடுத்தார்.


அரவக்குறிச்சி தொகுதி தற்போது 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு காரணமாக காலியாக இருப்பதால் அந்த தொகுதியில் போட்டியிட்டு அமைச்சரின் சவாலை செந்தில் பாலாஜி ஏற்று கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :