”பி.வி. சிந்துவை நான் திருமணம் செய்தே தீருவேன்..” அடம்பிடிக்கும் 75 வயது விவசாயி

Arun Prasath| Last Updated: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (12:50 IST)
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை தனக்கு திருமணம் செய்து வைக்ககோரி, 75 வயது முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றவர். மேலும் உலக அளவில் மிகவும் பிரபலமானவரும் கூட. இந்நிலையில் தனக்கு பி.வி.சிந்துவை திருமணம் செய்துவைக்ககோரி , ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மலைச்சாமி என்ற 75 வயது விவசாயி ஒருவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மனுவில், ”விளையாட்டுத் துறையில் தீராத ஆர்வம் கொண்ட நான், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள மிகவும் உறுதியாக இருப்பதாகவும், பி.வி.சிந்து எங்கிருந்தாலும் விடப்போவதில்லை எனவும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :