1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2019 (18:29 IST)

இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று பிடிபட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா??

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று பிடிபட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேர் என தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்த கடுமையான போக்குவரத்து சட்டங்கள் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் பிடிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தமிழகம் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 1,18,018 பேர் பிடிப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரில் சீட் பெல்ட் அணியாதவர்கள் 36,835 பேர் பிடிப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.