ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 30 மே 2024 (12:38 IST)

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்..! கூடுதலாக 57 பேரை நியமித்தது தேர்தல் ஆணையம்..!!

Election Commision
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்  39 தொகுதிகளுக்கு 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது.  இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
 
வாக்கு எண்ணிக்கை தேதி நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளுக்கும் மொத்தமாக 57 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மூன்று தொகுதிகள் உட்பட 16 தொகுதிகளுக்கு தலா இரண்டு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 
கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் மூன்று பார்வையாளர்கள் என நியமித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.