ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 மே 2024 (06:45 IST)

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில், பாஜகவுக்கு 8 முறை வாக்களித்து வீடியோ பதிவிட்ட விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
8 முறை வாக்கு செலுத்தி வீடியோ வெளியிட்ட ராஜன் சிங் என்ற இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்தவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.
 
கடந்த இரண்டு நாட்களாகவே இளைஞர் ஒருவர் எட்டு முறை வாக்களித்ததாக வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியான நிலையில் அந்த வீடியோவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் இப்படித்தான் பாஜக முறைகேடு செய்து ஆட்சியைப் பிடித்து வருகிறது என்று விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போல் மேலும் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Siva