என்னை உருவாக்கிய உனக்கு நன்றி- சேரன்
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான சொல்ல மறந்த கதை. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகுவதால், இயக்குனருக்கு சேரன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், பிரபல இயக்குனர் தங்கர் பச்சான், இவர், சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், அழகி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார், இவர், இயக்கிய படங்கள் தேசிய விருது பெற்றது.
இந்த நிலையில், கடந்த 2002 ஆண்டு தங்கர் பச்சான் இயக்கிய படம் சொல்ல மறந்த கதை. இப்படத்தில்,ஹீரோவாக சேரன் நடித்திருந்தார்.
குடும்பக் கதையான இப்படம் பெரும் வெற்றி பெற்ற இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்படம் குறித்து,இயக்குனர் தங்கர் பச்சான் பதிவிட்டு, ஒருவீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், இயக்குனர் சேரன் தன் டிவிட்டர் பக்கத்தில், தங்கர்.... இன்றும் எங்கு சென்றாலும் மக்கள் என்னிடம் கண்கலங்கி பேசும் படைப்பு அது.. அந்த படைப்பில் சிவதானுவாய் என்னை உருவாக்கிய உனக்கு நன்றி.. இன்னும் பல நல்ல படைப்புகளோடு உன்னை எதிர்பார்க்கிறேன் நண்பனாய்...என்று தெரிவித்துள்ளார்.