திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 7 நவம்பர் 2022 (08:25 IST)

5 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?

school
அசாம் மாநிலத்தில் உள்ள திபு என்ற நகரில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை அடுத்து அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் ஐந்து நாள் விடுமுறை என அம்மாநில பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
அசாம் மாநிலத்தில் உள்ள திபு நகரில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திபு நகரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் 5 நாள்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை இந்த விடுமுறை இருக்கும் என்றும் அதன் பின்னர் டெங்கு காய்ச்சலின் பரப்பில் நிலவரத்தை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அசாம் மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
Edited by Siva