திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (23:58 IST)

துனிஷா சர்மா தற்கொலை வழக்கு: காதலருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

Tunisha sharma
கடந்த 24 ஆம் தேதி பிரபல  நடிகை துனிஷா சர்மா, ஷூட்டிங் ஸ்பாட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

21 வயது இளம் நடிகை துனிஷா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீஸார் ஷீசன் கானை(27) கைது செய்தனர்.

விசாரணை முடிந்து இன்று போலீஸார் அவரை மாஜிஸ்ரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதன்பின், அவரை 14   நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், துனிஷா சர்மாவை, முன்னாள் காதலர் ஷூசன் கானும் அவரது குடும்பத்தினரும்  மதமாற்றம் செய்ய தூண்டியதாக  நடிகையின் தயார் வனிதா சர்மா புகார் அளித்தது, இதைக் கொலைவழக்காக விசாரிக்க வேண்டுமென கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.