1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (10:43 IST)

அம்மா உணவாக பணியாளர்களை மிரட்டும் திமுகவிற்கு ஓபிஎஸ் கண்டனம்!

அம்மா உணவகங்களில் பணிபுரிவோர் அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை திமுகவினர் பணியிலிருந்து நீக்க முயற்சிப்பதும், மிரட்டுவதும் கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
மேலும், அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும்,கடமையும் அரசுக்கு உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.