தொடர்புடைய செய்திகள்
- வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. போலீசார் விசாரணை!
- எம்.எல்.ஏவுக்கு கடிதம் எழுதிய மாணவி விபத்தில் பலி: உறவினர்கள் போராட்டம்!
- ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்று பணி? – அமைச்சர் அறிவிப்பு!
- அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்
- உண்ணாவிரத போராட்டம் நடத்திய 79 ஆசிரியர்கள் மயக்கம்: டிபிஐ வளாகத்தில் பரபரப்பு!
சென்னையில் தொடரும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்! போலீசார் பேச்சுவார்த்தை!
சென்னையில் தொடரும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்! போலீசார் பேச்சுவார்த்தை!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் அதிகரித்ததை அடுத்து 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினர்
இந்த ஒப்பந்தம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பணி நீடிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
ஆனால் போலீசாரின் வேண்டுகோளையும் மீறி தற்போது ஒப்பந்த செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
