செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (11:38 IST)

சென்னை தனியார் மருத்துவமனை பாத்ரூமில் ரகசிய கேமரா!! உறைந்துபோன பெண்கள்

சென்னையில் தனியார் மருத்துவமனையில் பெண்கள் பாத்ரூமில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சமீபத்தில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டான். இது தமிழகம் மட்டுமில்லாது நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பெண்கள் துணி மாற்று அறைக்கு சென்ற பெண் ஒருவர் அங்கு ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார்.
 
இந்த நாச வேலையில் ஈடுபட்டது, அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த 2 துப்புரவு தொழிலாளர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் அந்த 2 அயோக்கியன்களை கைது செய்தனர். அவன்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னைவாசிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.