5வது ஆண்டு ஆட்சியில் அடியெடுத்து வைத்த எடப்பாடியார்!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (09:29 IST)
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பதவி ஏற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 முதல் அதிமுக அலுவலகத்தில் பெற்றுக்க்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
 
இதனிடையே, தமிழக முதல் அமைச்சராக கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆந் தேதி எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பதவி ஏற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து. 
 
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) எடப்பாடி பழனிசாமி தனது 5வது ஆண்டு ஆட்சியில் அடியெடுத்து வைக்கிறார். முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்கள் தமிழக மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனை அதிமுகவினர் தற்போது கொண்டாடி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :